இலங்கையில் ஒரே நாளில் உச்சம் தொட்ட கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை!

இலங்கையில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் நேற்றய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மொத்தமாக 997 தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 23-ஆம் திகதி 969 தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டதே நாட்டில் இதுவரை பதிவான அதிகூடிய தொற்று நோயாளர் தொகையாக பதிவாகியிருந்த நிலையில் நேற்று ஆயிரத்தை நெருங்கிய தொற்று நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

புதிய தொற்று நோயாளர்களுடன் இதுவரையில் இலங்கையில் உறுதி செய்யப்பட்ட கொரோனா தொற்று நோயாளர் தொகை 102,376 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நேற்றிரவு மேலும் 3 கொரோனா மரணங்கள் நாட்டில் பதிவாகியுள்ளன. இவற்றுடன் இலங்கையில் பதிவான மொத்த கொரோனா மரணங்கள் 647 ஆக உயர்ந்துள்ளது

Previous articleயாழில் காதலித்த இளம் ஜோடி தலைமறைவு – காதலியின் தாயையும் சகோதரணையும் கடத்திய காதலனின் தந்தை
Next articleகல்வி நடவடிக்கையை தடையின்றி தொடர்வது மிக அவசியம்!