கல்வி நடவடிக்கையை தடையின்றி தொடர்வது மிக அவசியம்!

மாணவர்களின் கல்வி நடவடிக்கையை தடையின்றி தொடர்வது மிகவும் முக்கியம் என தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

அனைவரதும் ஒத்துழைப்புடன் சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடித்து பாடசாலை நடவடிக்கைகள் தொடர்ந்தாலும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

பல பாடசாலைகளில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவித்த அவர், அதில் பெரும்பாலானவர்கள் பாடசாலைக்கு வெளியே தொற்று கண்டறியப்பட்டவர்கள் என்றும் கூறினார்.

இதேவேளை சில பகுதிகளில் உள்ள கொரோனா நிலைமை காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டாலும் நாடளாவிய ரீதியாக பாடசாலைகள் மூடப்படாது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleஇலங்கையில் ஒரே நாளில் உச்சம் தொட்ட கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை!
Next articleதமிழர்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்பதனை தமிழர்கள் உணர தொடங்கியுள்ளனர்!