திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட முன்னனிப் பாடசாலைகளில் ஒன்றான கிண்ணியா முஸ்லிம் மகளிர் தேசிய பாடசாலையின் இரண்டு மாடிக் கட்டடம் ஒன்று சுவர்கள் இடிந்த நிலையிலும் வெடித்து கம்பிகள் வெளியில் தென்படுகின்ற நிலையில் காணப்படுகின்றது.
இக்கட்டடத்தில் சுமார் 8 வகுப்புக்கள் நடைபெற்று வரும் நிலையில் மாணவர்களும் ஆசிரியர்கள்களும் மிகவும் அச்சத்துடன் தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பாடசாலையின் எஸ் டி இ சி உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை நிருவாகத்தினரின் தீர்மானத்தின் படி இவ்வகுப்பறை கட்டடத்திற்குள் வகுப்பு நடாத்துவதை தற்காலிகமாக இடை நிறுத்தப் பட்டுள்ளது.
ஏற்கனவே வகுப்பறைகள் பற்றாக்குறையாக இருக்கும் தருணத்தில் இவ்வாறான நிலைமை பாடசாலை நிருவாகத்தினருக்கு கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வது பெறும் சவாலான ஒரு விடயமாகும்.
2400க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்டு இயங்கி வரும் ஒரு பாடசாலையாகும் கடந்த காலங்களில் அனைத்து துறைகளிலும் சிறப்பாக மிளிர்ந்த இப்பாடசாலை என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே பாடசாலையின் நலன் கருதி சம்பத்தப்பட்ட அதிகாரிகள் கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் பாடசாலை நிர்வாகம்கோரிக்கை விடுக்கின்றார்கள்.