மோட்டார் சைக்கிளில் நாய் மோதி விபத்தாகி பரிதாபமாக உயிரிழந்த யுவதி!

தென்னிலங்கையில் இளம் ஜோடி ஒன்று பயணித்த மோட்டார் சைக்கிளில் நாய் ஒன்று மோதியமையினால் ஏற்பட்ட விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் இளைஞன் படுகாயமடைந்துள்ளதாக வெலிபென்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இத்தேபான பிரதேசத்தை சேர்ந்த நிமேஷா அன்ஸனி என்ற 18 வயதுடைய யுவதியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 24ஆம் திகதி காலை 7.45 மணியளவில் இந்த ஜோடி கோப்பியவத்தை பிரதேசத்தை நோக்கி பயணிக்கும் போது நாய் ஒன்று மோட்டார் சைக்கிளில் மோதியமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த இருவரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது யுவதி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் நாகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Previous articleஉங்களுக்கு புதிய வகை கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதா? வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி?
Next articleகொழும்பு IDH வைத்தியசாலையில் நிரம்பி வழியும் இளைஞர்கள்