கொழும்பு IDH வைத்தியசாலையில் நிரம்பி வழியும் இளைஞர்கள்

கொழும்பு IDH வைத்தியசாலை மற்றும் ஹோமாகம வைத்தியசாலையில் கோவிட் தொற்றாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட அனைத்து அறைகளும் நிரம்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

IDH வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவின் அனைத்து கட்டில்களும் நேற்று நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹோமகம வைத்தியசாலையில் கோவிட் தொற்றாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட அனைத்து அறைகளும் நிரம்பியுள்ளது. மேலும் சில வைத்தியசாலைகளை கோவிட் தொற்றாளர்களுக்கு ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இம்முறை அடையாளம் காணப்பட்ட கோவிட் தொற்றார்களில் அதிகமானோர் இளைஞர்கள் எனவும் அவர்களுக்கு அதிக தீவிரமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை பாரிய அளவு அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது மிகவும் ஆபத்தான நிலைமை எனவும், மக்கள் இதனை புரிந்துக் கொண்டு பயண கட்டுப்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous articleமோட்டார் சைக்கிளில் நாய் மோதி விபத்தாகி பரிதாபமாக உயிரிழந்த யுவதி!
Next articleயானை தாக்கி வயோதிபர் உயிரிழப்பு!