யானை தாக்கி வயோதிபர் உயிரிழப்பு!

திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் யானை தாக்கி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று (27) காலை அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் சேருநுவர – ஆர்.பீ.04 பகுதியைச் சேர்ந்த பி.எச்.டி.சுவேற்றி சவரிமுத்து (67 வயது) என தெரியவருகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleகொழும்பு IDH வைத்தியசாலையில் நிரம்பி வழியும் இளைஞர்கள்
Next articleஒட்சிசன் தட்டுப்பாட்டில் இயங்கும் கொழும்பு வைத்தியசாலை!