நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மூடப்படுகின்றன!

நாட்டின் அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை மூடப்படுகின்றன.

நாட்டில் தீவிரமடைந்து வரும் கோவிட் தொற்று காரணமாக குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக மேல் மாகாண பாடசாலைகள், வடமேல் மாகாண பாடசாலைகள், சபரகமுவ மாகாண பாடசாலைகள், திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பல பாடசாலைகள் மற்றும் அனுராதபுர கல்வி வலயத்தின் 13 பாடசாலைகள் உள்ளிட்ட மேலும் பல பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன.

எனினும், தற்போது அதிகரித்து வரும் கோவிட் தொற்றின் அபாயம் காரணமாக அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை மூடப்படுகின்றன.

மேலும், கோவிட் பரவல் தீவிரம் அடைவதன் காரணமாக வரும் 30ஆம் திகதி வரை பிரத்தியேக வகுப்புக்களை நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Previous articleஒட்சிசன் தட்டுப்பாட்டில் இயங்கும் கொழும்பு வைத்தியசாலை!
Next articleயாழ்ப்பாணம் முடக்கப்படுமா?- முக்கிய அறிவிப்பினை வெளியிட்டார் க.மகேசன்