யாழில் பல இடங்களிலும் நிலை கொண்டுள்ள இராணுவத்தினர்-மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

யாழ்.நகர் மற்றும் புறநகர் பகுதி பிரதான சந்திகளில் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதை கண்காணிப்பதற்கு இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர்.

பிரதான சந்திகளில் நிற்கும் இராணுவத்தினர் முக கவசங்கங்களை உரிய முறையில் அணியாதவர்களை எச்சரித்து அவற்றை உரிய முறையில் அணிந்து செல்ல பணித்து வருகின்றனர். பொதுமக்கள் ஒன்று கூடுவதையும் தடுப்பதோடு யாழ் நகரப் பகுதிகளில் சன நெரிசலை தடுக்கும் செயற்பாட்டினையும் முன்னெடுத்து வருகின்றார்கள்.

பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை உரிய முறையில் கடைப்பிடிப்பதனை உறுதிப்படுத்தும் முகமாகவும் மக்களின் பாதுகாப்புக்காக இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

Previous articleஇந்தியாவில் 3.49 லட்சத்தை தாண்டிய தினசரி பாதிப்புகள்!
Next articleபுர்கா தடைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது!