புர்கா தடைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது!

இலங்கையில் ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர், முகத்தை முழுவதுமாக மூடுகின்ற ஆடைகள் குறித்து சர்ச்சை ஏற்பட்டது.

அதன்படி, புர்கா ஆடையை தடை செய்யுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தற்போது புர்கா உள்ளிட்ட முழுமையாக முகத்தை மறைக்கும் ஆடைகளை தடை செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்க்கு அனுமதி கிடைத்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு புர்கா மற்றும் நிகாப் ஆகியவற்றை தடை செய்ய முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் சரத் வீரசேகர கூறியுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மீதான விவாதத்தின் போது அமைச்சர் சரத் வீரசேகர புர்காவிற்கு தடை விதிக்கப்படும் என அறிவித்திருந்தார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியிருந்த நிலையில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் முறையான ஆலோசனை மேற்கொண்ட பின்னரே முடிவு எடுக்கப்படும் என அரசாங்கம் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Previous articleயாழில் பல இடங்களிலும் நிலை கொண்டுள்ள இராணுவத்தினர்-மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
Next articleஇலங்கையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த எட்டு பேருக்கு தொற்று!