முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பேணாமலும் வந்த பயணிகள் கடுமையாக எச்சரிக்கை!

 நோர்வூட் நகர் உள்ளிட்ட இடங்கள் நோர்வூட் பொலிஸாரால் இன்று திடிர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

நகரில் உள்ள கடைகள் மற்றும் பொது இடங்கள் இவ்வாறு பொலிஸாரால் இவ்வாறு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளளன.

இதன்போது பொகவந்தலாவையில் இருந்து அட்டன் நோக்கி வந்த பேருந்து ஒன்று பொலிஸாரால் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது பேருந்தில் இருந்த பயணிகள் யாவரும் கீழே இறக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அப்போது முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பேணாமலும் வந்த பயணிகள் கடுமையாக எச்சரிக்கப்பட்டதுடன், சிலர் நோர்வூட் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மேலும் சுகாதார வழிக்காட்டல்களை மீறி பயணிகளை ஏற்றி வந்த பஸ்சின் சாரதியும், நடத்துனரும் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

அட்டன் பகுதியில் இன்றும் ஆங்காங்கே கொவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

Previous articleபிரான்ஸில் இலங்கைப் பெண் ஒருவர் கழுத்து வெட்டிக் கொலை!
Next articleமுல்லைத்தீவில் கோவிலில் தீ மிதித்த இருவர் வைத்தியசாலையில் அனுமதி!