யாழ்,மன்னார், வவுனியா மாவட்டங்களில் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்றிருந்த 4 பேருக்கு தொற்று உறுதி!

யாழ்.மாவட்டத்தில் இருவர் உட்பட வடக்கில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.

இதன்படி 499 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தில் இருவருக்கும், வவுனியா, மன்னார் மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்டத்தில் சாவகச்சோி வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறவந்த ஒருவருக்கும், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிக்சை பெற்றுவந்த இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மன்னார் வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறவந்த ஒருவருக்கும், வவுனியா – பூவரசங்குளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெறவந்திருந்த ஒருவருக்கும் தொற்று உறுதியானதாக

பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார்.

Previous articleஆட்டோவொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் கணவரும், மனைவியும் படுகாயம்!
Next articleயாழில் தோட்டத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய இளைஞன் மீது சரமாரி வாள்வெட்டு!