யாழில் தோட்டத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய இளைஞன் மீது சரமாரி வாள்வெட்டு!

யாழ்.மிருசுவில் – கெற்பேலி பகுதியில் தோட்டத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞன் மீது சரமாரி வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது.

சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை குறித்த இளைஞன் தோட்டத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

வழிமறித்த ஒருவர் இளைஞன் மீது சரமாரியாக வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றிருக்கின்றார். சம்பவத்தில் க.ததுர்சன்(வயது25) என்ற இளைஞன்

உடனடியாக மீட்கப்பட்டு சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். சம்பவம தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன்,

சந்தேகத்தின் பெயரில் ஒருவரை கைது செய்துள்ளனர்.

Previous articleயாழ்,மன்னார், வவுனியா மாவட்டங்களில் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்றிருந்த 4 பேருக்கு தொற்று உறுதி!
Next articleபல உடல்நல பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் ஏலக்காய்!