இலங்கையில் ஒட்சிசன் பற்றாக்குறை வர வாய்ப்பில்லை!

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தேவையான ஒட்சிசனுக்கு பற்றாக்குறை இல்லை என இலங்கையின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று தெரிவித்தார்.

அத்துடன் களுபோவில வைத்தியசாலையில் ஒட்சிசன் பற்றாக்குறை இருப்பதாகவும் நோயாளியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் வெளியான செய்திகளில் உண்மை இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் உள்ளூர் ஒட்சிசன் உற்பத்தியாளர்கள் தேவையான அளவு ஒட்சிசனை விட அதிகமாக வழங்க உறுதியளித்துள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.

Previous articleநவலோக மருத்துவமனைக்கு சென்ற ரணில்
Next articleகனடாவில் கொரோனா நிலைமை மோசமாகத்தான் உள்ளது, ஆனால் கவலைப்படாதிருங்கள் அனைத்தும் வெகுவிரைவில் சரியாகிவிடும்!