கனடாவில் கொரோனா நிலைமை மோசமாகத்தான் உள்ளது, ஆனால் கவலைப்படாதிருங்கள் அனைத்தும் வெகுவிரைவில் சரியாகிவிடும்!

கனடாவில் கொரோனா நிலைமை மோசமாகத்தான் உள்ளது, ஆனால் கவலைப்படாதிருங்கள் விடியல் வருகிறது என, ஆறுதலளிக்கும் வார்த்தைகளை பகிர்ந்துள்ளார் உலக சுகாதார அமைப்பின் ஆலோசகர் ஒருவர்.

கொரோனாவின் மூன்றாவது அலையை எதிர்கொண்டுள்ள கனடா, பல்லாயிரக்கணக்கானோரை ஏற்கனவே பலிகொண்டுவிட்டது.

இந்த நேரத்தில்தான் உலக சுகாதார அமைப்பிடமிருந்து ஆறுதலளிக்கும் ஒரு செய்திவந்துள்ளது. அது, ‘விடியல் வருகிறது’ என்பதுதான்! கனடாவைப் பொருத்தவரை, நாளொன்றிற்கு 9,000 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகிறார்கள்.

குறிப்பாக ஒன்ராறியோ கொரோனாவின் மூன்றாவது அலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் இதற்கு மேல் இடமில்லை என்பது போன்ற ஒரு நிலைமை. இப்படிப்பட்ட ஒரு சூழல் நிலவும் நிலையிலும், உலக சுகாதார அமைப்பின் ஆலோசகரான Dr. Peter Singer, கனடா மக்களுக்கு ஆறுதலான வார்த்தைகளைக் கூறியுள்ளார்.

இது விடியலுக்கு முந்தைய இருள், இப்போது கனடாவின் நிலைமை மோசமாக உள்ளது என்பதில் சந்தேகமேயில்லை, ஏராளமானோர் அவதியுற்று வருகிறார்கள். 100 ஆண்டுகளில், இது மிக மோசமான கொள்ளை நோய், இது கடினமான காலகட்டம்.

ஆனால், விடியல் வருகிறது என்கிறார் அவர். அவர் கூறுவதை ஆமோதிப்பது போல, கனடாவின் தலைமை சுகாதார அலுவலரான Dr. Theresa Tamம், சமீபத்தைய நாட்களில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. R எண் 1க்கும் கீழே குறைந்துவிட்டது என்கிறார்.

தடுப்பூசிகளும், சுகாதார கட்டுப்பாடுகளும் இணைந்து இந்த கொள்ளை நோயை முடிவுக்குக் கொண்டு வந்துவிடும் என்கிறார் Singer. ஆக, அதுதான் முக்கியம், மக்கள் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி போன்ற கொரோனா கட்டுப்பாடுகளை கைக்கொள்வதும், காற்றோட்டமில்லாத அறைகளைத் தவிர்ப்பதும்தான் முக்கியம் என்பதை மனதில் வைப்பதுதான் முக்கியம் என்று நான் நினைக்கிறேன் என்கிறார் Singer.

Previous articleஇலங்கையில் ஒட்சிசன் பற்றாக்குறை வர வாய்ப்பில்லை!
Next articleஒன்ராறியோவில் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியால் மீண்டும் ஒருவருக்கு இரத்தக்கட்டி பாதிப்பு!