இலங்கையில் மேலும் சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டது!

இலங்கையில் மேலும் சில கிராம சேவகர் பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி, வெல்லவாய நகரசபை பகுதி, வேஹெரயாய, கொட்டம்கஹபொக்க கிராம சேவகர் பிரிவு, புத்தல – ரஹதன்கம கிராம சேவகர் பிரிவு, உஹன – குமரிகம கிராம சேவகர் பிரிவு, மாத்தளை – அலுகொல்ல கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் நேற்றைய தினமும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டது. தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு பின்னரான கலப்பகுதியில் கோவிட் பரவல் தீவிரமடைந்துள்ளது.

நேற்றைய தினம் மாத்திரம் மாத்திரம் தினம் 1,096 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதையடுத்து நாட்டில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 103,472 ஆக அதிகரித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், எட்டு கோவிட் மரணங்களும் பதிவாகியிருந்தன.

Previous articleஒன்ராறியோவில் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியால் மீண்டும் ஒருவருக்கு இரத்தக்கட்டி பாதிப்பு!
Next articleஇளம் வர்த்தகர் ஒருவர் அடித்து கொலை!