இளம் வர்த்தகர் ஒருவர் அடித்து கொலை!

கொழும்பு புறநகர் பகுதியான தலங்கம, தலாஹேன பிரதேசத்தைச் சேர்ந்த இளம் வர்த்தகர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மாலை குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், பிரதான சந்தேகநபர் அந்த பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதான சந்தேகநபருக்கு உதவியதாகக் கூறப்படும் நபர் மொனராகல பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி திரும்பிக்கொண்டிருந்தபோது தலங்கம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதான சந்தேகநபர் கொலை செய்யப்பட்ட வர்த்தகரின் நண்பர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தின் பிரதான சந்தேக நபரின் காதலி என்று கூறப்படும் பெண்ணிடம் தலங்கம பொலிஸார் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, மாலபே பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட ராஜபக்ச முதியன்சலாகே சந்தன திலக் ராஜபக்ச என்ற 46 வயதான வர்த்தகரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

மாத்தளை – ரத்தோட்டை பகுதியில் உள்ள காட்டில் எரியூட்டப்பட்டிருந்த நிலையில் குறித்த வர்த்தகர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஇலங்கையில் மேலும் சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டது!
Next articleஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவிட் தொற்றாளிகள் பதிவு!