முல்லைத்தீவில் இடியன் துவக்கு வெடித்து காயமடைந்த நிலையில் ஒருவர் கைது!

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை கிராமத்தில் பன்றிக்கு வெடி வைப்பதற்காக இடியன் துப்பாக்கி பயன்படுத்த முற்பட்ட போது தவறுதலாகத் துப்பாக்கி வெடித்துக் காயமுற்ற நிலையில் குறித்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

முல்லைத்தீவு குமுழமுனை பிரதேசத்தின் வனப்பகுதியில் பன்றிக்கு வெடி வைப்பதற்காகச் சட்டவிரோத இடியன் துப்பாக்கியைக் கொண்டு சென்று தயார்ப்படுத்திய போது துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இருப்பினும் குறித்த நபர் இரகசியமாக மருந்து எடுத்துக் கொண்டு வீட்டிலிருந்த நிலையில் குறித்த விடயம் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து முல்லைத்தீவு பொலிஸாரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Previous articleஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவிட் தொற்றாளிகள் பதிவு!
Next articleயாழ் நாச்சிமார் கோவில் ஆலய செயலாளர் கைது!