இலங்கையில் கர்ப்பிணிகளைத் அதிகளவில் தாக்கும் புதிய வைரஸ்!

நாட்டில் பரவி வரும் திரிபு அடைந்த புதிய கொரோனா வைரஸ் கர்ப்பிணிப் பெண்களிடையே அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றது என மகப்பேறியல் நிபுணர் மயுரம்மன டெவொலகே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வைரஸ் நுரையீரலைக் கடுமையாகப் பாதிக்கும் நிலையில் கர்ப்பிணித் தாய்மார்களிடையே அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது எனவும் நேற்று கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதுவரை நாட்டில் 3 கர்ப்பிணித் தாய்மார்கள் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, கர்ப்பிணித் தாய்மார்கள் கொரோனாத் தொற்றிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கர்ப்பிணித் தாய்மார்கள் சிறிய அறிகுறிகள் தோன்றினாலும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் மகப்பேறியல் நிபுணர் மயுரம்மன டெவொலகே அறிவுறுத்தியுள்ளார்.

Previous articleஅனைத்து ரசிகளுக்குமான இன்றைய இராசிபலன்கள் – (28.04.2021)
Next articleஅம்மம்மா இறந்த சோகத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்த பேரன்!