றிசாட் பதியூதீனை விடுதலை செய்யுமாறு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீனை விடுதலை செய்யுமாறு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (புதன்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசுக்கு ஆதரவு வழங்காததற்கா இந்த கைது, சிறுபான்மை தலைமைகள் விடுதலைசெய், உண்மையான சூத்திரதாரிகளை கைதுசெய், அரசே பழிவாங்காதே போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

இதன்போது வவுனியா நகரசபையின் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினரான ரி. கே. இராசலிங்கம், இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களான ஏ. ஆர். எம். லரிப், அப்துல் பாரி உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Previous articleநாட்டை உடனடியாக முடக்க வேண்டும் – பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் அதிரடி அறிக்கை
Next articleதமிழக்தில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் : உடல்களை தகனம் செய்ய காத்திருக்கும் மக்கள்