தமிழக்தில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் : உடல்களை தகனம் செய்ய காத்திருக்கும் மக்கள்

இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் உடல்களை தகனம் செய்வதற்கு போதிய இடவசதிகள் இல்லாமையால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி டெல்லியில் உள்ள கல்லறைகளில் தற்காலிகமாக இறுதி சடங்கை செய்வதற்கு மக்கள் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஒரு உடலை எரிப்பதற்கு 6 மணி நேரங்கள் எடுக்கும் நிலையில், ஒவ்வொருவரும் சராசரியாக 3 மணித்தியாலங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டிய துர்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பூங்காக்கள் மற்றும் பிற வெற்று இடங்களும் தகனம் செய்வதற்கு பயன்படுத்தப்பட்டு வருதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன் அதிகபட்சம் 22 உடல்களை தகனம் செய்யும் தொழிலாளி ஒருவர் ஒருநாளைக்கு அதிகாலை முதல் நள்ளிரவு வரை தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous articleறிசாட் பதியூதீனை விடுதலை செய்யுமாறு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!
Next articleமுக கவசம் அணியாதவர்களுக்கு கடுமையாக எச்சரிக்கை!