முக கவசம் அணியாதவர்களுக்கு கடுமையாக எச்சரிக்கை!

நோர்வூட் நகர் உள்ளிட்ட இடங்கள் நோர்வூட் பொலிஸாரால் நேற்று (செவ்வாய்க்கிழமை) திடிர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

நகரில் உள்ள கடைகள் மற்றும் பொது இடங்கள் இவ்வாறு பொலிஸாரால் இவ்வாறு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளளன.

இதன்போது பொகவந்தலாவையில் இருந்து ஹட்டன் நோக்கி வந்த பேருந்து ஒன்று பொலிஸாரால் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது பேருந்தில் இருந்த பயணிகள் யாவரும் கீழே இறக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அப்போது முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பேணாமலும் வந்த பயணிகள் கடுமையாக எச்சரிக்கப்பட்டதுடன், சிலர் நோர்வூட் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மேலும் சுகாதார வழிக்காட்டல்களை மீறி பயணிகளை ஏற்றி வந்த பேருந்தின் சாரதியும், நடத்துனரும் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

Previous articleதமிழக்தில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் : உடல்களை தகனம் செய்ய காத்திருக்கும் மக்கள்
Next articleநேற்றைய தினம் கொழும்பிலேயே அதிக நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்!