நேற்றைய தினம் கொழும்பிலேயே அதிக நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்!

இலங்கையில் அதிகூடிய கொரோனா பாதிப்பு நேற்றைய தினம் பதிவாகியுள்ளது.

குறிப்பாக கொழும்பிலேயே அதிக நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று (புதன்கிழமை) காலை வரையான கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக ஆயிரத்து 111 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒரே நாளில் நாட்டில் அதிகளவில் கொரோனா நோயாளர்கள் பதிவாகிய தினமாக நேற்றைய தினம் கருதப்படுகிறது.

குறித்த நோயாளர்களில் 15 பேர் வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் கொழும்பு மாவட்டத்தில் 200 பேருக்கும் கம்பஹா மாவட்டத்தில் 198 பேருக்கும் மன்னார் மாவட்டத்தில் ஒருவருக்கும் பதுளை மாவட்டத்தில் 20 பேருக்கும் அம்பாறை மாவட்டத்தில் 17 பேருக்கும் திருகோணமலை மாவட்டத்தில் 28 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, வவுனியா மாவட்டத்தில் மூவருக்கும் கண்டி மாவட்டத்தில் 74 பேருக்கும் நுவரெலியா மாவட்டத்தில் 55 பேருக்கும் புத்தளம் மாவட்டத்தில் 08 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் யாழ். மாவட்டத்தில் 09 பேருக்கும் மாத்தளை மாவட்டத்தில் 32 பேருக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 08 பேருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவருக்கும் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Previous articleமுக கவசம் அணியாதவர்களுக்கு கடுமையாக எச்சரிக்கை!
Next articleமன்னாரில் 2 வாரங்களில் தொற்றாளர்கள் அதிகரிக்கலாம்!