கொழும்பைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் பத்திரிகையின் ஆசிரியர் உட்பட 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அங்கு பணிபுரிகின்ற ஊழியர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சிலர் தொற்றுக்கான அறிகுறியை காண்பித்த நிலையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் ஆசிரியர் உட்பட 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது.