பாடசாலை மீளத் திறப்பது எப்போது என அடுத்தவாரம் கலந்துரையாடப்படும்?

கொரோனா அச்சம் காரணமாக மீண்டும் மூடப்பட்டுள்ள பாடசாலைகளை திறப்பது குறித்து அடுத்தவாரம் கலந்துரையாடவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

நாடு முழுவதிலும் பாடசாலைகள் நேற்று முதல் வருகின்ற 30ஆம் திகதிவரை மூடப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் 02ஆம் திகதி இறுதிமுடிவு எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

Previous articleயாழ் நெல்லியடி சந்தைக்கு அண்மையில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பதட்டம்!
Next articleயாழில் வேலைக்கு சென்ற இளைஞன் ஒருவரை காணவில்லை!