யாழில் வேலைக்கு சென்ற இளைஞன் ஒருவரை காணவில்லை!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மத்தி பகுதியில் வசிக்கும் நாதன் ஜெசிந்தன் (வயது 20) என்பவரை கடந்த 23.04.2021ல் இருந்து காணவில்லை என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞன் யாழ் போதனா வைத்தியசாலையில் காவலாளியாக கடமைபுரிந்து வருகின்றார்.

இந்த நிலையில் கடந்த 2021.04.23 அன்று இரவு நேரக் கடமைக்கு சென்றுள்ள நிலையில் அவர் இன்னமும் திரும்பி வரவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleபாடசாலை மீளத் திறப்பது எப்போது என அடுத்தவாரம் கலந்துரையாடப்படும்?
Next articleநாடு மீண்டும் முடக்கப்படுமா? வெளியானது ஜனாதிபதியின் அறிவிப்பு!