நாடு மீண்டும் முடக்கப்படுமா? வெளியானது ஜனாதிபதியின் அறிவிப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து செல்வதை அடுத்து மீண்டும் நாடு முடக்கப்படுமா என்ற கேள்விக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதிலளித்துள்ளார்.

மேலும் கிராமத்துடன் கலந்துரையாடல் என்ற வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஹல்துமுல்ல பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையிலேயே ஜனாதிபதி இந்த பதிலை அளித்துள்ளார்.

அதாவது நிகழ்வின் இறுதியில், அரச அதிகாரிகள் நாட்டை முழுமையாக முடக்க ஏதாவது தீர்மானம் உள்ளதா என கேட்டுள்ளனர்.அதற்கு பதிலளித்த ஜனாதிபதி இல்லை என்று கூறியுள்ளார் மேலும் நாட்டை முழுமையாக மூடாமல், கொரோனா தொற்று அதிகரிக்கின்ற இடங்களை மாத்திரம் முடக்குவதற்கு தீர்மானித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

Previous articleயாழில் வேலைக்கு சென்ற இளைஞன் ஒருவரை காணவில்லை!
Next articleகயிறு கைவிட்டதால் நீரில் மூழ்கி உயிரிழந்த 5 வயது சிறுமி!