இலங்கையில் ஏழு வயது சிறுவனை மோசமான முறையில் தாக்கி துன்புறுத்திய தாய் மற்றும் பாட்டி – இணையத்தில் கசிந்த காணொளி

ஏழு வயது சிறுவனை மோசமான முறையில் தாக்கி துன்புறுத்திய தாய் மற்றும் பாட்டியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பல்லேவல பொலிசாரே சிறுவனை துன்புறுத்திய தாய் மற்றும் பாட்டியை கைது செய்துள்ளனர்.

குறித்த சிறுவனை தாக்கும் காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி பரவலாக பகிரப்பட்டு வந்தன.

இதனையடுத்தே, தாக்குதலை மேற்கொண்ட தாய் மற்றும் பாட்டி கைது செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

அத்துடன், சம்பவம் தொடர்பில் பல்லேவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleகயிறு கைவிட்டதால் நீரில் மூழ்கி உயிரிழந்த 5 வயது சிறுமி!
Next articleபாகிஸ்தானின் பனிச்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட இராணுவ வீரர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!