பாகிஸ்தானின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள சியாச்சின் செக்டரின் ஹனீப்பில் ஏப்ரல் 25 மதியம் 1 மணியளவில் ஏற்பட்ட பனிச்சரிவுக்குப் பின்னர் மீட்கப்பட்ட இரண்டு இராணுவ வீரர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக இன்று இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்திய இராணுவத்தின் அறிக்கையில் “சியாச்சின் செக்டரின் ஹனீப்பில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக இரண்டு இராணுவ வீரர்கள் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டனர். 2021 ஏப்ரல் 25 அன்று மதியம் 1 மணி நேரத்தில் பனிச்சரிவு ஏற்பட்டது. இரு வீரர்களையும் மாலை 7.30 மணிக்குத்தான் மீட்க முடிந்தது. இந்த இரண்டு வீரர்களும் காயங்கள் காரணமாக இறந்துள்ளனர்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.