நாட்டில் மேலும் 988 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.
இதன்படி கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 104,475 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 227 பேர் குணமடைந்தனர்.
தொற்று நோய் தடுப்புப் பிரிவில் நாளாந்தம் வெளியிடப்படும் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 95,083 ஆக அதிகரித்துள்ளது.
தொற்றுறுதியான 8,737 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.