எதிர்வரும் நாட்களில் நாட்டின் பல பகுதிகள் முடங்கலாம் – தயார் நிலையில் இருக்குமாறு மக்களுக்கு இன்று அறிவிப்பு

அதிக எண்ணிக்கையிலான கோவிட் தொற்றாளர்கள் கண்டறியப்படும் பட்சத்தில், எதிர்வரும் நாட்களில் நாட்டில் அதிகமான பகுதிகள் முடக்கப்படலாம் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா எச்சரித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய கோவிட் நிலைமையைக் கருத்தில் கொண்டு அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்துகொண்டு மக்கள் தயார் நிலையில் இருப்பது நல்லதாக அமையுமென அவர் அறிவித்துள்ளார்.

ஊடங்களுக்கு இன்றைய தினம கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில்,

பல நாட்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை மக்கள் கொள்வனவு செய்வது நல்லது. எனினும் அவை அனைத்தும் எதிர்வரும் நாட்களில் பதிவாகும் கோவிட் நோயாளிகளிள் எண்ணிக்கையைப் பொறுத்தே அமையும் என்பதை நாம் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

நாம் மக்களை அச்சுறுத்தவோ அல்லது உண்மை நிலைமையை மறைக்கவோ தயாரில்லை. ஆனால் எந்தவொரு நிகழ்விற்கும் தயாராக இருப்பது அவசியம்.

இதற்கிடையில், நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் கோவிட் நோயாளிகளுக்கு கூடுதல் சிகிச்சை நிலையங்களை அமைக்க இராணுவம் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Previous articleதமிழக்தில் உச்சம்கொரோனா அச்சுறுத்தல் உதவிக் கரம் நீட்டும் சர்வதேச நாடுகள்!
Next articleஇந்தியாவில் கோவிட் கோரத்தாண்டவம் – செல்வந்தர்கள் நாட்டை விட்டு தப்பியோட்டம்?