டெல்லியில் கோவிட்டால் இறந்தவர்களின் உடல்களைத் தகனம் செய்ய இடமில்லாததால் உடல்களுடன் உறவினர்கள் வீட்டில் வசிப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் டெல்லியில் அதிகரித்து வரும் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கையால் மருத்துவமனைகளில் மரண ஓலம் எழுந்துள்ளது.
ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக அங்கு உயிரிழப்புகள் சர்வ சாதாரணமாக நிகழ்ந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 300 நோயாளிகள் வரை இறப்பதால் உடல்களைத் தகனம் செய்ய இடம் கிடைக்காமல் நீண்ட வரிசையில் உறவினர்கள் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
அதனால் உடல்களை ஒரே இடத்தில் வைத்து உறவினர்கள் முன்பு தகனம் செய்யும் நிலைமை ஏற்பட்டுள்ளது.