புதிய கொள்ளளவுடைய 18 லீற்றர் ஹைப்ரிட் பிரிமியர் எரிவாயு சிலிண்டரை அறிமுகப்படுத்த அனுமதி!

நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது . குறித்த அறிக்கையில் வாடிக்கையாளர்களின் விழிப்புணர்வுக்கு உட்பட்டு 18 லீற்றர் ஹைப்ரிட் பிரிமியர் எரிவாயு சிலிண்டரை புதிய உற்பத்தியாக சந்தைக்கு அறிமுகப்படுத்த லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது .

இருப்பினும், நுகர்வோரின் அன்றாட தேவைகளுக்கு எந்தவித பற்றாக்குறையும் ஏற்படாத வகையில் 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரை சந்தைக்கு வெளியிட லிட்ரோ எரிவாயு நிறுவனம் உறுதியளித்துள்ளது.

அதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரை 1,493 ரூபாவுக்கு வாடிக்கையாளர்களின் விருப்பப்படி குறித்த முகவர்கள் ஊடாக பெற்றுக் கொடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

அதனடிப்படையில் , சந்தையில் 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரை கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற் பட்டால் 1977 இலக்கத்திற்கு அழைத்து தெரிவிக்குமாறு நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

Previous articleநாட்டில் மேலும் 6 பேர் உயிரிழப்பு!
Next articleவவுனியா நகரின் பல பகுதிகளில் கொவிட்-19 தொற்று நீக்கும் செயற்பாடு!