கரவெட்டியில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்!

கரவெட்டி கிழக்கு, யார்க்கரு பகுதியில் இன்று காலை எரிந்த நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டது. இளைஞனின் சடலமென தமிழ்பக்கம் ஆரம்ப தகவலை வெளியிட்டிருந்தது. எனினும், தற்போது அது முதியவர் ஒருவரின் சடலமென்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதே பகுதியை சேர்ந்த 62 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரே தீயில் எரிந்து மரணமாகியுள்ளார்.

தனது வீட்டிற்கு அருகில் சிறிய உணவகம் ஒன்றை நடத்தி வரும் அவர் மாற்றுத்திறனாளியான முதியவரே சடலமாக மீட்கப்பட்டார்

நேற்று (27) இரவு அவர் உயிரிழந்துள்ளார்.

வழக்கம் போல கடையை பூட்டி விட்டு, இரவு 9 மணியளவில் கடைக்கு முன்பகுதியிலேயே படுத்துள்ளார். மனைவி, பிள்ளைகள் அருகிலேயே உள்ள வீட்டில் படுத்துள்ளனர்.

இரவு 9.45 மணியளவில் “ஐயோ அம்மா“ என அலறல் சத்தம் கேட்டு, முகன் வெளியே ஓடி வந்துள்ளார்.

அப்போது, கடைக்கு அருகிலுள்ள பனையொன்றின் கீழே தந்தை தீயில் எரிந்து கொண்டிருப்பதை அவதானித்தார். உடனடியாக அவரை காப்பாற்ற முயற்சிக்கப்பட்ட போதும் அது பலனளிக்கவில்லை. அவர் தீயில் கருகி உயிரிழந்தார்.

அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டுள்ளது. அவர் தற்கொலை செய்திருக்கலாமா என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணையை நடத்தி வருகிறார்கள்.

நெல்லியடி பொலிசார் மேலதிக விசாரணையை நடத்தி வருகிறார்கள்

Previous articleவவுனியா நகரின் பல பகுதிகளில் கொவிட்-19 தொற்று நீக்கும் செயற்பாடு!
Next articleஇன்று மட்டும் நாட்டில் 1451 பேருக்கு கொரோனா!