யாழ்.மாவட்டத்தில் 12 பேர் உட்பட வடக்கில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

யாழ்.மாவட்டத்தில் 12 பேர் உட்பட வடக்கில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தொற்றுக்குள்ளானவர்கள் விபரங்களை மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், இன்றைய தினம் 666 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தில் 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் இருவருக்கும், யாழ்.சிறைச்சாலையில் இருவருக்கும்,

சண்டிலிப்பாயில் 3 பேருக்கும், யாழ்.மாநகரில் இருவருக்கும், கரவெட்டியில் ஒருவருக்கும், வேலணையில் ஒருவருக்கும், கோப்பாயில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் வவுனியா செட்டிகுளம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவருக்கும்,

கிளிநொச்சியில் தனிமைப்படுத்தல் நிலையத்தை சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Previous articleஇன்று மட்டும் நாட்டில் 1451 பேருக்கு கொரோனா!
Next articleஇதுவரையில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளான பகுதிகள் – முழு விபரம்