திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 6 பேருக்கு கொரோனா!

பண்டாரவளை, எல்லா பகுதியிலுள்ள ஹொட்டலொன்றில் நடந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 25 ஆம் திகதி எல்ல, கிதலெல்ல பகுதியில் உள்ள ஒரு ஹொட்டலில் திருமணம் நடைபெற்றது. புதுமணத் தம்பதியர் உட்பட 6 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மணமக்கள், மணமகளின் தாயார் உள்ளிட்ட 6 பேர் தொற்றிற்குள்ளாகியுள்ளதாக எல்லா சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார். கும்பல்வெல மற்றும் மகுலெல்லவில் வசிப்பவர்களே தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.

அந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டவர்கள், தொடர்பிலிருந்தவர்கள் என சுமார் 150 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Previous articleயாழ். பல்கலை துணைவேந்தருக்கு வெற்றிகரமாக இருதய சத்திரசிகிச்சை!
Next articleஇந்தியாவில் உருமாறிய கொரோனா 17 நாடுகளுக்கு பரவியுள்ளது!