இந்தியாவில் உருமாறிய கொரோனா 17 நாடுகளுக்கு பரவியுள்ளது!

இந்தியாவில் உருமாறிய கொரோனா 17 நாடுகளுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து புதிய வகை வைரஸ் பரவியமை கண்டறியப்பட்டது. இதற்கு பி-1-617 என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது இந்தியாவில் கொரோனா வேகமாக பரவுவதற்கு இந்த உருமாற்ற கொரோனாதான் காரணமாக இருக்கலாம் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதற்கு இடையே இந்தியாவில் உருமாறிய கொரோனா ஏனைய நாடுகளுக்கும் பரவி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகள் இந்திய விமானங்களுக்கு தடை விதித்துள்ளன.

இந்த நிலையில், இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் குறைந்தது 17 நாடுகளுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

தரவு தளத்தில் 120இற்கும் மேற்பட்ட வைரஸ் வரிசைகளை ஆய்வு செய்ததில் இது தெரியவந்துள்ளதாகவும் பெரும்பாலான வைரஸ் வகைகள் இந்தியா, பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து பதிவேற்றப்பட்டன என்றும் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருக்கும் ஏனைய மாறுபாடுகளை காட்டிலும் பி-1-617 அதிக வளர்ச்சி விகிதத்தை கொண்டுள்ளது என்றும் இது வேகமாக பரவக் கூடிய தன்மை கொண்டது என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Previous articleதிருமண நிகழ்வில் கலந்து கொண்ட 6 பேருக்கு கொரோனா!
Next articleகொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவ விமானப்படை தயார்!