கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவ விமானப்படை தயார்!

கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவ தயாராக இருப்பதாக இந்திய விமானப்படை தலைமை தளபதி பதூரியா பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் விமானப்படையின் பங்களிப்பு குறித்து பிரதமர் மோடியுடன் விமானப்படை தளபதி பதூரியா ஆலோசனை நடத்தினார்.

அதில் கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவ இந்திய விமானப்படை தயாராக இருப்பதாக பதூரியா தெரிவித்தார்.

நாடு முழுவதும் உள்ள அனைத்து இடங்களையும் சென்றடையும் திறனுடைய பெரிய மற்றும் நடுத்தர அளவிலான விமானங்கள் இந்த நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படலாம்.

இந்த நிவாராண நடவடிக்கைகளுக்கு அதிகமானோர் தேவைப்படுவர் என்பதால் விமான குழுவினர் எண்ணிக்கையும் அதற்கேற்ப அதிகரிக்கப்பட்டு உள்ளதாகவும் பதூரியா தெரிவித்துள்ளார்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous articleஇந்தியாவில் உருமாறிய கொரோனா 17 நாடுகளுக்கு பரவியுள்ளது!
Next articleஇலங்கையில் அதிகூடிய கொரோனா பாதிப்பு பதிவு – ஒரேநாளில் ஆயிரத்து 466 பேருக்கு தொற்று!