இலங்கையில் அதிகூடிய கொரோனா பாதிப்பு பதிவு – ஒரேநாளில் ஆயிரத்து 466 பேருக்கு தொற்று!

இலங்கையில் நாளொன்றுக்கான அதிகூடிய கொரோனா பாதிப்பு நேற்றைய தினம் பதிவாகியுள்ளது.

அதன்படி கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் மேலும் ஆயிரத்து 466 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நாட்டில் பதிவாகியுள்ள மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 4 ஆயிரத்து 953ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 95 ஆயிரத்து 83 பேர் தொற்றில் இருந்து பூரண குணமடைந்து வீடுகளுக்கு திருப்பியுள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 9 ஆயிரத்து 209 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

இதேநேரம், கொரோனா வைரஸ் தொற்றினால் நாட்டில் மேலும் 6 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

பல்லேகம, வீரபொக்குன, ஹாலிஹெல, மாவனெல்ல, நிட்டம்புவ மற்றும் வத்தள ஆகிய பிரதேசங்களிலேயே இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், 4 ஆண்களும் இரு பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் பதிவாகியுள்ள மொத்த மரணங்களின் எண்ணிக்கை 661ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleகொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவ விமானப்படை தயார்!
Next articleமே -1 லிருந்து ஒரு மாதத்திற்கு இலங்கையின் எந்தவொரு பகுதியும் முன் அறிவிப்பின்றி முடக்கப்படும் – இராணுவ தளபதி அறிவிப்பு