வவுனியா செட்டிக்குளத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று!

வவுனியா செட்டிக்குளம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு கொரோனா தொற்று நேற்றிரவு (27.04) உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா செட்டிக்குளம் குருக்கள் புதுக்குளம் பகுதியினை சேர்ந்த நபரொருவர் சுகயீனம் காரணமாக செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரிடம் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

குறித்த பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் நேற்றிரவு வெளியாகிய நிலையில் குறித்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து குறித்த நபரை கொரோனா சிகிச்சை மையத்திற்கு அனுப்புவதற்குறிய நடவடிக்கையினையும் அவருடன் தொடர்புடைய நபர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையிலும் சுகாதார பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

Previous articleமாகாணத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா!
Next articleஉயிருடன் இருக்கும் போது கண்ணீர் அஞ்சலி போஸ்டர்!