புதிதாக உரு திரிபடைந்த வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் பலர் அடையாளம்!

பிரித்தானியாவில் பரவுகின்ற புதியவகை கொரோனா தொற்று இலங்கையில் பரவுவதாக நேற்று தெரிவிக்கப்பட்டது.

தற்போது பிரித்தானியாவில் பரவும் B.1.1.1 என்ற உரு திரிபடைந்த வைரஸ் தொற்றுக்குள்ளாகி உள்ளதாக சந்தேகிக்கப்படும் கொரோனா தொற்றாளர்கள் சிலர் காலி மற்றும் களுத்துறை ஆகிய பிரதேசங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலதிக பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

Previous articleஎட்டு மாவட்டங்களில் 29 பகுதிகள் தனிமைப்படுத்தலில்!
Next articleதிருகோணமலையில் 6 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் முடக்கம்!