திருகோணமலையில் 6 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் முடக்கம்!

திருகோணமலை மாவட்டத்தில் மேலும் 6 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சுமேதகம்புர, மூடோவி, கோவிலடி, லிங்கா நகர்இ,காவட்டிகுடா மற்றும் சீன துறைமுகம் ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இத் தருணம் முதல் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த பிரதேசங்களில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) பரவலை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Previous articleபுதிதாக உரு திரிபடைந்த வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் பலர் அடையாளம்!
Next articleஇரண்டாவது டோஸ் தடுப்பூசி போடும் பணி வவுனியாவில் ஆரம்பிப்பு!