இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடும் பணி வவுனியாவில் ஆரம்பிப்பு!

வவுனியாவில் உள்ள மருத்துவ சேவையாளர்கள் மற்றும் முன்களப்பணியாளர்களிற்கு இரண்டாம் கட்ட கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட கோவிட்-19, “கோவிஷெல்ட்” தடுப்பூசிகள் வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவ சேவையாளர்கள், பொதுச்சுகாதார பரிசோதகர்களிற்கு ஏற்றும் பணி கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதியிலிருந்து முன்னெடுக்கப்பட்டது.

அதற்கமைய மூன்று மாதங்களின் பின்னர் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் ஏற்றும் பணிகள் வடக்கில் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

அதற்கமைய வவுனியா வைத்தியசாலையில் மருத்துவ சேவையாளர்களிற்கு இரண்டாவது டோஸ் ஏற்றும் செயற்பாடுகள் இன்று இடம்பெற்றது.

Previous articleதிருகோணமலையில் 6 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் முடக்கம்!
Next articleயாழில் அவசரகால நிலை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்களை மேற்கொண்டுள்ளோம்!