ரூ.75 கோடி சம்பளம் பெற்ற மூத்த அதிகாரி துறவியானார்!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் திட்டப் பிரிவு துணைத் தலைவராக பணியாற்றி வந்த பிரகாஷ் ஷா என்பவர், கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட உடனேயே ஆடம்பர வாழ்க்கையைத் துறந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

கடந்த 25-ம் தேதி வெள்ளை ஆடை உடுத்தி ஜைன துறவிக்கான தீட்சையை பெற்ற இவருடன் மனைவி நைனா ஷாவும் துறவறம் பூண்டார், ஓய்வுபெறும்போது இவரது ஆண்டு சம்பளம் 75 கோடி ரூபாய் ஆகும்.

கெமிக்கல் இன்ஜினீயரிங்கில் பிடெக் மற்றும் எம்டெக் பட்டம்பெற்றவர் இவர். ஐஐடி மும்பையில் பட்டம் பெற்று உள்ளார், இவரது இளையமகன் 7 ஆண்டுகளுக்கு முன்பே தனது 24 வது வயதில் ஜைன துறவியாகியுள்ளார்.

மேலும், முகேஷ் அம்பானியின் வலது கரமாகத் திகழ்ந்தவர் பிரகாஷ் ஷா. என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleயாழில் அவசரகால நிலை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்களை மேற்கொண்டுள்ளோம்!
Next articleஒரு ‘டோஸ்’ தடுப்பூசி போட்டாலே கொரோனா பரவல் அபாயம் குறைவு!