கொடிகாமம் நகரத்தில் எழுமாற்றாக நடத்தப்பட்ட பிசிஆர் சோதனையில் 4 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இன்று எழுமாற்றான பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
அதில் கொடிகாமம் சந்தை, அதை அண்டிய கடைகளில் குறைநதளவானவர்களிற்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 4 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
அதில் இருவர் கொடிகாமம் சந்தை வியாபாரிகள். இருவர் அருகிலுள்ள வர்த்தக நிலையத்தில் பணியாற்றுபவர்கள்.
குறைந்தளவானவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 4 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து சுகாதார பிரிவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நாளை, சந்தை மற்றும் நகரிலுள்ள வர்த்தக நிலையங்களில் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.