இன்று இதுவரை 1,077 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,077 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 106,030ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கடந்த இரண்டு நாட்களில் நாளாந்தம் ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்றுறுதியானமை குறிப்பிடத்தக்கது.

Previous articleகொடிகாமம் சந்தை, வர்த்தக நிலையங்களில் கொரோனா தொற்றாளர்கள்!
Next articleகொரோனா நோயாளிக்கு தன்னுடையை படுக்கையை வழங்கி விட்டு, மருத்துவமனையில் இருந்து வெளியேறிய முதியவர்!