பொதுமக்கள் தாங்கள் விரும்பும் கொரோனா வைரஸ் தடுப்பூசியைத் தெரிவுசெய்ய முடியாது!

பொதுமக்கள் தாங்கள் விரும்பும் கொரோனா வைரஸ் தடுப்பூசியைத் தெரிவு செய்ய முடியாது என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

அதற்கு பதிலாக அவர்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், “இலங்கை இதுவரை அஸ்ட்ராசெனகா கொவிஷீல்ட் தடுப்பூசியைப் பயன்படுத்தியது. சீன சினோபார்ம் தடுப்பூசியின் பங்குகள் தற்போது இலங்கையில் உள்ளன. அதனை உள்ளூர்வாசிகள் பயன்படுத்த அனுமதிக்காக காத்திருக்கிறார்கள்.

ரஷ்யாவிலிருந்து வாங்கிய ஸ்புட்னிக் வி தடுப்பூசி விரைவில் இலங்கைக்கு வரவுள்ளது.

நாட்டில் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ள நிலையில், கையிருப்பில் உள்ள தடுப்பூசிகளைக்கொண்டு இரண்டாவது டோஸை செலுத்தும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எவ்வாறிருப்பினும் பொதுமக்கள் தாங்கள் விரும்பும் கொரோனா வைரஸ் தடுப்பூசியைத் தெரிவு செய்ய முடியாது” என மேலும் தெரிவித்துள்ளார்.

Previous articleஅவசரகால நிலை ஏற்பட்டால் எதிர்கொள்வதற்கு தயாராக உள்ளோம்!
Next articleஇலங்கையில் சிறுவர்களைத் தாக்கும் புதிய வைரஸ்!