இலங்கையில் சிறுவர்களைத் தாக்கும் புதிய வைரஸ்!

தற்போது சிறிலங்காவில் சிறுவர்களிடையே புதிய வகை வைரஸ் தொற்று ஒன்று பரவிவருவதாக கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையின் சிறுவர் நோய் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதன்போது சிறுவர்களுக்கு காய்ச்சல், வாய் மற்றும் கால்களில் சிவப்பு நிற பருக்கள், நாக்கில் புண் ஏற்படுதல்,உடலில் அரிப்பு, உடல் வருத்தம்என்பன இக்காய்ச்சலின் அறிகுறியென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இக்காய்ச்சால் பாதிக்கப்படும் சிறுவர்களுள் சிலருக்கு நகத்தோல் உரிவதாகவும் அவர்தெரிவித்துள்ளார்.

அத்துடன் சில சிறுவர்களுக்கு இவ்வைரஸ் ​தொற்று ஏற்பட்டாலும் காய்ச்சல் காணப்படுவதில்லை என்றும் தெரிவித்துள்ள அவர், இத்தொற்று ஏற்புடும் சிறுவர்களை தனிமைபடுத்தி சுத்தமாக வைத்திருக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Previous articleபொதுமக்கள் தாங்கள் விரும்பும் கொரோனா வைரஸ் தடுப்பூசியைத் தெரிவுசெய்ய முடியாது!
Next articleமுகக்கவசம் அணியாது பயணித்த 177 பேரில் ஐவருக்கு தொற்று!