நாட்டில் நாளொன்றுக்கான அதிகளவு கொரோனா தொற்றாளர்கள் இன்று பதிவாகினர்!

நாட்டில் இன்று மட்டும் ஆயிரத்து 491 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்தர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து ஆறாயிரத்து 444ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், நாட்டில் மேலும் 362 பேர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றிலிருந்து மீண்டோரின் மொத்த எண்ணிக்கை 95ஆயிரத்து 445ஆகப் பதிவாகியுள்ளது.

மேலும், கொரோனாவால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 661ஆக உள்ள நிலையில், இன்னும் 10 ஆயிரத்து 338 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

Previous articleதாயார் உயிரிழந்துவிடுவார் : ஆக்சிஜன் சிலிண்டரை எடுத்து செல்லாதீர்கள் கதறி அழுத மகன்
Next articleமுன்னாள் பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரிய காலமானார்!