இதற்குமேல் க்ரீன் டீ குடிக்காதீர்கள்: பக்கவிளைவுகள் நிறைய உள்ளது

உடல் எடையை குறைக்க அனைவரும் பின்பற்றும் ஒரு பழக்கம் என்னவென்றால் அது க்ரீன் டீ குடிப்பது தான்.

சிலர் காலையில் எழுந்ததும் க்ரீன் டீ குடிப்பார்கள். அதனால் பல நன்மைகள் இருந்தாலும் , அதை அதிகமாக குடிக்கும் போது சில தீமைகளையும் சந்திக்க நேரிடும்.

க்ரீன் டீயை அதிகமாக குடிப்பதால் ஏற்படும் தீமைகள்?
  • க்ரீன் டீயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருந்தாலும், அதிகமாக குடிக்கும் போது அதிலுள்ள சில கெமிக்கல் கலவைகள் நம் உடலில் நச்சுக்களை உண்டாக்கிவிடும்.
  • க்ரீன் டீயில் உள்ள காஃபைன், ப்ளூரின் மற்றும் ப்ளோனாய்டுகள் நமக்கு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.
  • க்ரீன் அதிகமாக குடிக்கும் போது அது கல்லீரல் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
  • அதிகமாக க்ரீன் டீ அருந்தும் போது, அது இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை அதிகரித்து இன்ஸோமினியா, நடுக்கம் ஏற்படுவதோடு, சில சமயம் இறப்பு ஏற்பட கூட வாய்ப்புள்ளது.
  • அதிகமாக க்ரீன் டீ குடிக்கும் போது அதிகமான ப்ளூரின் நமது உடலுக்குள் சென்றுவிடும். அதனால் வளர்ச்சி தாமதம், எலும்பு நோய், பல் பிரச்சனைகள் போன்ற எண்ணற்ற பிரச்சினைகளை உண்டாக்கும்.
  • க்ரீன் டீயில் உள்ள அதிகப்படியான ப்ளோனாய்டுகள் நமது உடல் இரும்புச் சத்தை உறிஞ்சி கொள்வதை தடுக்கிறது. இதனால் ரத்த சோகை பிரச்சனையை சந்திக்க நேரிடும்.
குறிப்பு

க்ரீன் டீ குடிக்கும் அளவானது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். ஆனால் மருத்துவர்கள், ஒரு நாளைக்கு 5 கப் க்ரீன் டீக்கு மேலாக குடிப்பது தவறு. அதிலும் கருவுற்ற பெண்கள் ஒரு நாளைக்கு 2 கப்பிற்கு மேலாக குடிக்கக் கூடாது என்று பரிந்துரைக்கின்றனர்.

க்ரீன் டீ குடிக்கும் போது அதில் தண்ணீரை அதிகமாக கலந்து கொஞ்சமாக க்ரீன் டீ கலந்து அளவாக குடித்தால் நலமாக வாழலாம்.

Previous articleமுன்னாள் பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரிய காலமானார்!
Next articleதினமும் 4 பாதாம் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் தெரியுமா?