தினமும் 4 பாதாம் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் தெரியுமா?

பாதாம் பருப்பில் உடலுக்கு நலம் சேர்க்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. வைட்டமின் ஈ, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம், துத்தநாகம், நியாசின், செம்பு, செலினியம் போன்றவை இருக்கின்றன.

தினமும் வெறும் 4 பாதாம் சாப்பிட்டு வந்தால் உங்கள் உடலில் ஏராளமான நன்மைகள் நடக்கும். மேலும் தினமும் 4 பாதாம் சாப்பிடுவதால் என்னென்ன மாற்றங்கள் உடலில் ஏற்படும் என்பதை பற்றி பார்ப்போம்.

பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
  • பாதாம் பருப்பில் மூளையையும் சிறுநீரகத்தையும் பாதுகாக்கும் பாஸ்பரஸ் உப்பு கால்சியத்தை விட இரு மடங்கு உள்ளது. இரத்த சோகையை குணப்படுத்தும் இரும்பு சத்தும் பாதாம் பருப்பில் தாராளமாக உள்ளது.
  • பாதாம் பருப்பில் மெலனின் மற்றும் கேரட்டின் புரதங்கள் அதிகளவு உள்ளன. பாதாம் பருப்புகளை தொடர்ந்து உண்டு வருபவர்களுக்கு தலைமுடி உதிர்தல் குறைபாடு நீங்குகிறது.
  • பாதாம் பருப்புகளை கருவுற்றிருக்கும் பெண்கள் சரியான விகிதத்தில் உட்கொண்டு வருவது, அவர்களுக்கும் அவர்கள் வயிற்றில் வளரும் கருவிற்கும் நன்மையை அளிக்கும்.
  • பாதாம், பருப்புகளை அதிகம் உண்பதால் அதிலிருக்கும் சத்துக்கள் ரத்தத்தில் இருக்கும் நோயெதிர்ப்பு திறனை அதிகரித்து ஜூரம், வைரஸ் தொற்று போன்றவற்றிலிருந்து நம்மை காக்கிறது.
  • பாதாம், பருப்புகளை தினமும் சாப்பிட்டு வரும் ஆண்களுக்கு நரம்புகள் வலுவடையும், உயிரணுக்கள் அதிகரித்து மலட்டுத் தன்மை மற்றும் ஆண்மைக்குறைவு குறைபாடுகள் நீங்கும்.
  • பாதாம் பருப்புகளில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கெட்ட கொழுப்பு சத்துக்கள் இல்லை. எனவே இப்பருப்புகளை அதிகம் உண்பவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு.
  • பாதாம் பருப்புகளில் உணவை செரிக்கும் வேதிப்பொருட்கள் அதிகம் உள்ளன. அவற்றை அதிகம் உண்பவர்களுக்கு குடல் சார்ந்த அத்தனை குறைபாடுகளும் நீங்கும்.
  • பாதாம் பருப்புகளில் தோலுக்கு நெகிழ்வு தன்மை, புத்துணர்வு பெற செய்யும் ரசாயனங்கள் அதிகம் உள்ளன. இது தோலுக்கு அதிக பளபளப்பை தருகிறது.
Previous articleஇதற்குமேல் க்ரீன் டீ குடிக்காதீர்கள்: பக்கவிளைவுகள் நிறைய உள்ளது
Next articleஇந்தியாவில் கோவிட் சடலங்கள் இடைவிடாது தகனம் செய்யப்பட்டு வருவதால் விறகுகளுக்கு தட்டுப்பாடு!